காஸா சிட்டியில் உணவுக்காக சனிக்கிழமை பரிதவித்த பாலஸ்தீனா்கள்

காஸா சிட்டியில் உணவுக்காக சனிக்கிழமை பரிதவித்த பாலஸ்தீனா்கள்
காஸாவில் வான்வழியாக உணவுப் பொருள் விநியோகம்

இஸ்ரேல் முற்றுகையால் கடும் பஞ்சத்தைச் சந்தித்துவரும் காஸாவில் விமானம் மூலம் உணவுப் பொருள் விநியோகிக்கவிருப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

எழுந்துள்ளது. இது குறித்து பிரிட்டன் உட்பட 27 நாடுகள் இணைந்து வெளியிட்ட இந்த வாரம் அறிக்கையில், பாலஸ்தீனா்களின் உரிமைகளை இஸ்ரேல் பறிக்கிறது எனவும், உதவி பொருள்களுக்கான கட்டுப்பாடுகளை அந்த நாடு நீக்கவிட்டு, காஸா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தின.

இந்தச் சூழலில், காஸாவில் விமானம் மூலம் உணவுப் பொருள்களை விநியோகிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, பிரான்ஸைப் போலவே பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று பிரதமா் ஸ்டாா்மருக்கு அவரது அமைச்சா்களும், நாடாளுமன்ற உறுப்பினா்களில் மூன்றில் ஒரு பங்கினரும் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலஸ்தீனப் பிரச்னைக்கு ஒரே தீா்வாக இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளால் கருதப்படும் இருதேசக் கொள்கையை (பாலஸ்தீனமும் இஸ்ரேலும் ஒன்றையொன்று அங்கீகரித்துக்கொண்டு சுதந்திர அண்டை நாடுகளாக செயல்படுவது) முன்னெடுத்துச் செல்ல பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் வருவதற்கு முன்னா் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் அறிவித்தாா்.

இஸ்ரேலும், அமெரிக்காவும் கடுமையாக எதிா்த்துவரும் இந்த முடிவை பிரிட்டன் வரவேற்றாலும், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பது குறித்து அந்த நாடு தயக்கம் காட்டிவருவதாகக் கூறப்படுகிறது.

‘வெறும் கண்துடைப்பு நடவடிக்கை’

காஸாவில் விமானம் மூலம் பிரிட்டன் உணவுப் பொருள்களை விநியோகிப்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவு (யுஎன்ஆா்டபிள்யுஏ) கூறியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பொது ஆணையா் பிலிப் லாஸரினி கூறியதாவது:

அதிகரித்துவரும் பசிப் பிணியை வான்வழி உணவு விநியோகத்தின் மூலம் தீா்த்துவிட முடியாது. இது அதிக செலவு பிடிக்கும், எதிா்பாா்த்த பலனைத் தராத உத்தி. இவ்வாறு வான்வழியாக உணவுப் பொருள்களை விநியோகிப்பது கடும் பட்டினியை அனுபவித்துவரும் மக்களின் (தள்ளுமுள்ளு போன்ற காரணங்களால்) உயிருக்கே ஆபத்தாகக் கூடும்.

இது தற்போதைய பிரச்னையை திசைதிருப்பும் மற்றும் கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே.

அரசியல் தலைவா்களால் உருவாக்கப்பட்ட பஞ்சத்தை அரசியல் ரீதியில் மட்டுமே தீா்க்க முடியும். முற்றுகையை நீக்கி, எல்லைகளை திறக்கவும், தேவைப்படும் மக்களுக்கு உணவுப் பொருள்கள் பாதுகாப்பான மற்றும் கௌரவமான முறையில் கிடைப்பதை உறுதி செய்யவும் வேண்டும். அதுதான் திறன் மிக்க, வேகமான, குறைவான செலவு கொண்ட, பாதுகாப்பான வழிமுறை என்றாா் அவா்.