நிபந்தனையில்லாமல் எப்படிக் காதலிப்பது

நிபந்தனையில்லாமல் எப்படிக் காதலிப்பது
உங்களுக்கு வெளியில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது, எப்போதும் பல சூழ்நிலைகளுக்கு உட்பட்டது. ஆனால் காதல் என்பது உள்தன்மையின் நிலை – உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது கட்டாயமாக நிபந்தனையின்றி இருக்கமுடியும்

காதலைப்பற்றி நீங்கள் பேசும்போது, அது நிபந்தனையற்றதாக இருக்கவேண்டும். நிபந்தனையுடைய காதல் மற்றும் நிபந்தனையில்லாத காதல் என்பதைப்போன்ற விஷயம் உண்மையில் இல்லை. அது என்னவென்றால், நிபந்தனைகள் இருக்கின்றன மற்றும் காதல் இருக்கிறது. ஆனால், ஒரு நிபந்தனை எழுகின்ற கணமே, அது ஒரு பரிவர்த்தனை என்ற அளவில்தான் இருக்கிறது. அது ஒரு வசதியான பரிவர்த்தனையாக இருக்கலாம், ஒரு நல்ல ஏற்பாடாக இருக்கலாம் – மக்கள் பலரும் அதிசிறப்பான ஏற்பாடுகளை வாழ்க்கையில் செய்திருக்கலாம் – ஆனால் அது உங்களை நிறைவு செய்யாது, அது உங்களை வேறொரு பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லாது. அது சௌகரியமானது மட்டுமே.

 உங்களுக்கு வெளியில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது, எப்போதும் பல சூழ்நிலைகளுக்கு உட்பட்டது. ஆனால் காதல் என்பது உள்தன்மையின் நிலை – உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது கட்டாயமாக நிபந்தனையின்றி இருக்கமுடியும்.

“காதல்” என்று நீங்கள் கூறும்பொழுது, அது ஒரு வசதிக்காக இருக்கவேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான நேரம், அது வசதியில்லை. அது உயிரை எடுக்கிறது. காதல் ஒரு மகத்தான விஷயமல்ல, ஏனென்றால் அது உங்களை முழுவதுமாக சாப்பிடுகிறது. நீங்கள் காதலில் இருக்கவேண்டும் என்றால், ‘நீங்கள்’ என்பது இருக்கக்கூடாது. ஒரு நபர் என்ற நிலையில், நீங்கள் கீழே விழுவதற்கு சம்மதிக்க வேண்டும், அப்போதுதான் அது நிகழமுடியும். அந்த செயல்முறையில் உங்கள் தனிப்பட்ட ஆளுமை பலப்படுத்தப்பட்டால், பிறகு அது ஒரு வசதியான சூழ்நிலையாக மட்டுமே இருக்கிறது, அவ்வளவுதான். ஒரு பரிவர்த்தனை என்பது என்ன மற்றும் ஒரு உண்மையான காதல் உறவு என்பது என்ன என்று நாம் அடையாளம் காணவேண்டும். ஒரு காதல் உறவு என்பது எந்த ஒரு குறிப்பிட்ட நபருடனும் இருக்கவேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட எந்த ஒருவருடனும் இல்லாமல், ஆனால் வாழ்க்கையுடன் உங்களுக்கு ஒரு மகத்தான காதல் உறவு இருக்கமுடியும். 

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதும், என்ன செய்யவில்லை என்பதும், உங்களைச் சுற்றிலும் இருக்கும் சந்தர்ப்பசூழல்களைப் பொறுத்திருக்கிறது. வெளிச்சூழல்களின் தேவைகளுக்கேற்ப நமது செயல்கள் உள்ளன. உங்களுக்கு வெளியில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது, எப்போதும் பல சூழ்நிலைகளுக்குக் கட்டுப்பட்டது. ஆனால் காதல் என்பது உள்நிலை – உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது கட்டாயமாக நிபந்தனையின்றி இருக்கமுடியும்.