சென்னை ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை! ஐடிஐ தகுதி தான்.. 21 ஆயிரம் சம்பளம்! விட்றாதீங்க

சென்னை: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் வரும் சென்னை ஆவடியில் உள்ள தொழிற்சாலையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் டெக்ன்ஷியன், கார்பெண்டர், எலக்ட்ரிஷியன் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் மொத்தம் 1,850 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணபிப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.
சென்னை ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான கனரக ஆயுத தொழிற்சாலை உள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்ப்பாட்டின் கீழ் வரும் இந்த தொழிற்சாலையில், இந்திய பாதுகாப்பு படைகளுக்கு தேவையான கவச வாகனங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன.
.1965 ஆம் ஆண்டு ஆவடியில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 1,850 ஜூனியர் டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்..
ஜூனியர் டெக்ன்ஷியன், கார்பெண்டர், எலக்ட்ரிஷியன், ஃபிட்டர், மெக்கானிஸ்ட், வெல்டர், பெயிண்டர் என 20 வகையான பணிகளில் மொத்தம் 1,850 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதாவது ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் முதலில் நிரப்படும். இந்த ஒப்பந்தங்கள் மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கப்படும். கல்வி தகுதியை பொறுத்தவரை துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
அனைத்து பணியிடங்களுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுக்ளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.21,000 சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு துறை சார்ந்த பிரிவு பணியிடங்களுக்கு ஏற்ற செய்முறை தேர்வு நடைபெறும். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி / எஸ்டி, பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
ஆர்வம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 19.07.2025 கடைசி நாளாகும். ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் போது, பத்தாம் வகுப்பு சான்றிதழ், அப்ரெண்டீஸ் பயிற்சி பெற்ற சான்றிதழ், சாதி சான்றிதழ், அனுபவம் இருந்தால் அதற்கான சான்றிதழ், வங்கி பாஸ் புக், ஆதார் கார்டு, பான் கார்டு டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்றின் ஒளிநகலையும் இணைத்து அனுப்ப வேண்டும்