டிகிரி ஓகே - அனுபவம் வேண்டாம்.. சென்னை அம்பத்தூர் எச்சிஎல் அலுவலகத்தில் வேலை.. ஜூலை 24ல் இண்டர்வியூ

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் நிறுவனம் சார்பில் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான இண்டர்வியூ ஜூலை 24ம் தேதி (நாளை மறுநாள்) சென்னையில் நடைபெற உள்ளது. தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்...
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் (HCL or HCL Technologies) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:..
தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் Process Associate - Fresher பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாறாக சட்டப்படிப்பு, பிஇ, பிடெக், எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி( கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னலாஜி) படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம். பிற பிரிவுகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் டைப்பிங் ஸ்கில்ஸ் நன்றாக இருக்க வேண்டும். அதேபோல் ஷிப்ட் அடிப்படையில் இருக்கும். குறிப்பாக இரவு ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படலாம்...
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஊழியர்களுக்கு Two Ways Cabs வசதி என்பது உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ ஜூலை 24ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூ Face To Face முறையில் நடக்கும். இண்டர்வியூவுக்கு செல்வோருக்கு லேப்டாப் கொண்டு செல்ல அனுமதியில்லை...