TNPSC Group 4 exam : இந்த கேள்விகளை படித்தால் மட்டும் போதும்... 175 மதிப்பெண் நிச்சயம்..!!

வருகின்ற குரூப் 4 தேர்விற்கு என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்றும், எந்த பாடத்தில் இருந்து எந்த கேள்விகள் வரலாம் என்பது குறித்து விளக்குகின்றார் மதுரை ரேடியன் ஐஏஎஸ் அகாடமி தலைவர் ராஜ பூபதி
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 12ஆம் தேதி கிட்டத்தட்ட 4000 காலி பணியிடங்களுக்கான குரூப் தேர்வு நடைபெற இருக்கின்றது. இதற்காக அனைவருமே தயாராகி இருக்கக்கூடிய நிலையில் இத்தேர்விற்கு என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்றும், எந்த பாடத்தில் இருந்து எந்த கேள்விகள் வரலாம் என்பது குறித்து விளக்குகின்றார் மதுரை ரேடியன் ஐஏஎஸ் அகாடமி
தலைவர் ராஜ பூபதி...
வருகின்ற ஜூன் 12-ம் தேதி அதாவது இன்னும் இரண்டு நாட்களுக்குள் குரூப் 4 தேர்வில் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்றால், முதலில் பொது அறிவு. பொது அறிவு 25 கேள்விகள் என்பது கணிதம். ஆரம்பத்தில் 25 கேள்விகளும் கணிதமாக கேட்கப்படும் ஆனால் தற்பொழுது அதில் திறனறிவு, என்று சொல்லக்கூடிய ஆப்டிடியூட்டில், சுருக்குதல், விழுக்காடு, LCM, விகிதம் விகிதாச்சாரம் என 15 கேள்விகளும், காரணவியலில் 10 கேள்விகள் என மொத்தம் 25 கேள்விகள் கேட்கப்படுகின்றது. பரப்பு, கன அளவு என கணிதவியலில் இருந்து 25 கேள்விகள் கேட்கப்படுவதற்கு நீங்கள் முழுமையாக பயிற்சி எடுத்திருக்க வேண்டும். ஆகையால் கணிதத்தில் 25க்கு குறைந்தபட்சமாக 24-வது கட்டாயமாக எடுத்திருக்க வேண்டும்
.