PM Kisan 20வது தவணை சிக்கலில்லாமல் கிடைக்க இந்த 3 விஷயங்கள் அவசியம்: உடனே செய்வது நல்லது

PM Kisan 20வது தவணை சிக்கலில்லாமல் கிடைக்க இந்த 3 விஷயங்கள் அவசியம்: உடனே செய்வது நல்லது
பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்? அதற்குள் விவசாயிகள் சில முக்கிய பணிகளை செய்து முடிக்க வேண்டும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

PM Kisan Samman Nidhi Yojana: மத்திய அரசு விவசாயிகளின் நன்மைக்காக பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. நாட்டின் விவசாயிகள் இந்த திட்டங்களில் சேர்ந்து நிதி சலுகைகளைப் பெறலாம். இவற்றில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் ஒரு பிரபலமான திட்டமாக உள்ளது...

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா

- பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், அரசாங்கம் தகுதியான விவசாயிகளுக்கு நிதி சலுகைகளை வழங்குகிறது. 

- இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகின்றது.

- இது 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 என்ற 3 சம தவணைகளில் வழங்கப்படுகிறது.

PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்..

பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணைக்காக திட்டத்துடன் தொடர்புடைய விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

- இது ஜூன் மாதமே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால், அப்படி நடகவில்லை.

- அதன் பிறகு ஜூலை 18 ஆம் தேதி பிரதமர் மோடி இதை வெளியிடுவார் என பெரிதும் நம்பப்பட்டது. அதுவும் நடக்கவில்லை.

எனினும், காத்திருப்பு இன்னும் நீடிக்காது என்றும் விரைவில் பிஎம் கிசான் 20வது தவணை விவசாயிகளுக்கு கிடைக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிஎம் கிசான் 20வது தவணை: எந்தெந்தெ விவசாயிகளுக்கு இது கிடைக்கும்?

- பிஎம் கிசான் 20வது தவணையை எந்தெந்த விவசாயிகள் பெறுவார்கள்? 

- இதை தவறாமல் பெற என்ன செய்ய வேண்டும்? 

- எந்தெந்த பணிகளை செய்துமுடிக்க வேண்டும்? இவற்றை பற்றி இங்கே காணலாம்.

பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனா 20வது தவணையைப் பெற இந்த 3 நிபந்தனைகளை பூர்த்தி செய்வது அவசியமாகும்.

- விவசாயிகள் e KYC செய்து முடித்திருந்தால், தவணையின் பலனை கண்டிப்பாகப் பெறுவார்கள்.

- இது திட்டத்தின் கீழ் மிக முக்கியமான பணியாகும்.

- இதை திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து ஒவ்வொரு விவசாயிகளும் செய்ய வேண்டும். 

- e KYC செய்து முடிக்காவிட்டால், 20வது தவணையின் பலன்களை இழக்க நேரிடும்.

- இந்த வேலையை இப்போது உங்கள் அருகிலுள்ள CSC மையத்தில் இருந்து செய்து முடிக்கலாம்.

- pmkisan.gov.in திட்டத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் இருந்தும் e-KYC வேலைகளை செய்து முடிக்கலாம்.

- திட்டத்தின் அதிகாரப்பூர்வ செயலியான கிசான் செயலியில் இருந்தும் e-KYC வேலைகளையும் செய்து முடிக்கலாம்.

நில சரிபார்ப்பு

- e-KYC தவிர, நில சரிபார்ப்பு பணியையும் செய்து முடிக்க வேண்டியது அவசியம். 

- பயனாளி விவசாயிகள், இந்த வேலையைச் செய்து முடித்திருந்தால், கண்டிப்பாக தவணையின் பலன் கிடைக்கும்.

- இதில், விவசாயிகளின் சாகுபடி செய்யக்கூடிய நிலம் சரிபார்க்கப்படுகிறது.

- ஆனால் விவசாயிகள் இந்த பணியைச் செய்யவில்லை என்றால், அவர்களது தவணை சிக்கிக்கொள்ளக்கூடும்.

ஆதாருடன் வங்கிக்கணக்கை இணைக்க வேண்டும்

- e-KYC மற்றும் நில சரிபார்ப்பு தவிர, ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்க வேண்டியதும் அவசியமாகும்.

- இதையும் செய்த விவசாயிகள் கண்டிப்பாக பிஎம் கிசான் 20வது தவணையை பெறுவார்கள்.

- அதேசமயம், இந்தப் பணியைச் செய்யாத விவசாயிகளின் தவணைப் பணம் சிக்கிக்கொள்ளக்கூடும். 

- இதை செய்ய, விவசாயிகள் தங்கள் வங்கிக்குச் சென்று உங்கள் ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும்.

பிஎம் கிசான் 20வது தவணை: சுருக்கமாக.....

- இந்த மாத இறுதிக்குள் பிஎம் கிசான் 20வது தவணைத் தொகை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

- இந்த தவணையை தவறாமல் பெற 3 முக்கிய பணிகளை செய்து முடிக்க வேண்டும்.

- இவற்றை நிறைவு செய்தால் தவணை எந்த வித சிக்கலும் இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்யலாம்.