இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
விளம்பி நாகனார்

நான்மணிக்கடிகை

பாடல் எண்: 11 

"கன்றாமை வேண்டுங் கடிய பிறர்செய்த

நன்றியை நன்றாக் கொளல்வேண்டும் - என்றும்

விடல்வேண்டும் தங்கண் வெகுளி அடல்வேண்டும்

ஆக்கும் சிதைக்கும் வினை." . . . .

                                           -விளம்பி நாகனார் 

விளக்கம்:

            ஒருவர் செய்த தீமைகளுக்காக அவரைக் கறுவாமை வேண்டும். ஆனால் அவர் செய்த நன்மைகளை மறவாமை வேண்டும். நம்மிடம் தோன்றும் கோபத்தை விட வேண்டும். பிறரது முன்னேற்றத்தைத் தடுக்கும் தவறான செயல்களை ஒழித்தல் வேண்டும்.