உஷார்: ``நல்லவேளை போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணீங்க; இல்லைனா ரூ.50,000 போயிருக்கும்'' - அனுபவ பகிர்வு

உஷார்: ``நல்லவேளை போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணீங்க; இல்லைனா ரூ.50,000 போயிருக்கும்'' - அனுபவ பகிர்வு
தெரியாத மெசேஜ், தவறான லிங்க், போலியான ஆப் மூலம் மோசடி. சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் ₹50,000 இழந்த உண்மை சம்பவம்.

என்னை மாதிரியே என் நண்பர் ஒருத்தர் சூப்பர் மார்க்கெட் வெச்சுருக்காரு. அவரு புதுக்கோட்டைய சேர்ந்தவரு. ஆனா, தமிழ்நாட்டுல இருக்க இன்னொரு ஊருல கடை வெச்சுருக்காரு.

கடந்த சனிக்கிழமை, அவரோடு கடைப் போனுக்கு ஒரு லிங்க் வந்துருக்கு. கடையில வேலை பார்க்கறவங்க எதார்த்தமா அந்த லிங்கை தொட, அடுத்த நொடியே, போன் ஹேங்க் ஆகியிருக்கு... அதிகமா சூடாகியிருக்கு.

அடுத்ததா, அந்தப் போன்ல இருந்த பேங்க் தகவல்கள் டெலீட் ஆயிருக்கு.

கொஞ்ச நேரத்துல, அவரோட பேங்க்ல இருந்து ஒரு மெசேஜ் வர்ற மாதிரி வந்துருக்கு. அதுல ஒரு ஆப்பை டௌன்லோடு செய்ய சொல்லி இருந்துருக்கு.

சாயந்திரம் நேரம், யு.பி.ஐ-ல வந்துருக்க காசை எல்லாம் செட்டில்மென்ட் அடிக்கணும்னு, அந்த மெசேஜ்ல சொல்லிருக்க ஆப்பை டௌன்லோடு செஞ்சுருக்காரு.

அந்த ஆப்பை ஓப்பன் செஞ்சதும் KYC மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கு. அதை அவரு பதிவு செஞ்சதும், அவரோட அக்கவுண்ட்ல இருந்து ரூ.50,000 அபேஸ் ஆயிருக்கு.