சத்தமே இல்லாமல் பெரிய மாற்றம்..75 நாடுகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சீனா! லிஸ்டில் இந்தியா இருக்கா

சத்தமே இல்லாமல் பெரிய மாற்றம்..75 நாடுகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சீனா! லிஸ்டில் இந்தியா இருக்கா
கொரோனா காலத்திற்குப் பிறகு சீனாவுக்குச் செல்லும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகச் சரிந்துவிட்டது.

பெய்ஜிங்: கொரோனா காலத்திற்குப் பிறகு சீனாவுக்குச் செல்லும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகச் சரிந்துவிட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகும் கூட சுற்றுலாப் பயணிகள் அங்குத் திரும்பவில்லை. இதனால் சுற்றுலாவை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டத்தில் சீனா தள்ளப்பட்டது. இந்தச் சூழலில் சீனா திடீர் நடவடிக்கையாகத் தனது விசா கொள்கையை முன்னெப்போதும் இல்லாத வகையில் தளர்த்தியுள்ளது.

உலகின் மற்ற நாடுகளைப் போலச் சீனா இல்லை. இன்னுமே சர்வாதிகாரம் இருக்கும் நாடுகளில் ஒன்றாகவே சீனா இருக்கிறது. இதனால் அங்கு வெளிநாட்டினருக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. வெளிநாட்டினர் அங்குச் சுற்றுலா செல்வதே மிகவும் கடினம் என்ற சூழலே இருந்தது

முன்னெப்போதும் இல்லாத வகையில்

இந்தச் சூழலில் சீனா தனது விசா கொள்கையை முன்னெப்போதும் இல்லாத வகையில் தளர்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மெல்லச் சீனா திரும்பி வருகின்றனர். பழைய விதிமுறைகளிலிருந்து பெரிய மாற்றமாக, 74 நாடுகளைச் சேர்ந்த மக்கள் இப்போது விசா இல்லாமல் 30 நாட்கள் வரை சீனா செல்லலாம்

சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை அதிகரிக்கும் முயற்சியாகச் சீன அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 2024ஆம் ஆண்டில் சுமார் 2 கோடி வெளிநாட்டினர் விசா இல்லாமல் சீனாவுக்குச் சென்றுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும். மேலும், முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இது தொடர்பாகச் சீனாவுக்குச் சமீபத்தில் சுற்றுலா சென்ற ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஜியோர்ஜி ஷவட்சே கூறுகையில், "விசாவுக்கு விண்ணப்பித்து, அந்த நடைமுறைகளை மேற்கொள்வது மிகவும் கடினமான விஷயம்.. விசா இல்லாமல் சென்று திரும்பலாம் என்பது உண்மையாகவே உதவியாக இருக்கிறது" என்றார்.

ரொம்ப ஈஸி

மற்ற நாடுகளைக் காட்டிலும் சீனா தான் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடைசியாகத் தளர்த்தியது. குறிப்பாக 2023 வரை அங்குக் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தன. அதன் பிறகே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன் பிறகு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. 2023ல் அங்கு 13.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே சென்றனர். இது கொரோனாவுக்கு முன்பு அங்குச் சென்ற 31.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு தான்.

பெரும்பாலான சுற்றுலாத் தலங்களில் இன்னுமே உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தான் அதிகம் உள்ளனர். வெளிநாட்டவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். அதேநேரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது என்கிறார்கள். இதனால் ஆங்கிலம் பேசும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளதாம்.

முதலில் டிசம்பர் 2023இல் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனா வரலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கொஞ்சக் காலத்திலேயே கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் சேர்க்கப்பட்டது. ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் உஸ்பெகிஸ்தானிய கடந்த மாதம் இதில் சேர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து4 மத்தியக் கிழக்கு நாடுகள் இணைந்தன. கடைசியாக ஜூலை 16ம் தேதி அஜர்பைஜான் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் விசா இல்லாத நுழைவு 75 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சீனாவுக்கு ஆப்பிரிக்கா உடன் நெருங்கிய உறவு இருந்தாலும் இதுவரை எந்தவொரு பெரிய ஆப்பிரிக்க நாடும் விசா இல்லாமல் நுழையத் தகுதி பெறவில்லை. வட அமெரிக்கா உட்படச் சில நாடுகளில் இருந்து வருவோர் கனெக்டிங் டிரான்ஸிட் (transit) பயணத்திற்கு வருவோர் 10 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம். அதேபோல இந்த லிஸ்டில் இந்தியாவும் இல்லை.