தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறதா..? போக்குவரத்து துறை விளக்கம்!

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா என்பது குறித்து போக்குவரத்து துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..
தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த அரசுக்கு உத்தரவிடக்கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன..
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டு தமிழக அரசின் உயர் மட்டக்குழு 4 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது..
அந்தவகையில் நீதிமன்ற உத்தரவுப்படி பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதுதொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது...
இதன் காரணமாக தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? என்று சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வு குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்பதால் கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்..
நீதிமன்ற தீர்ப்பின்படியே பொதுமக்களிடம் கருத்து கேட்பதாகவும், அரசுப் பேருந்து கட்டணம் நிச்சயம் உயர்த்தப்படாது என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.