விவசாயிகள் படும் கஷ்டங்களை அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன் - இ.பி.எஸ்.

விவசாயிகள் படும் கஷ்டங்களை அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன் - இ.பி.எஸ்.
.தி.மு.க. ஆட்சியில் சொட்டு நீர் பாசனத்திற்கு மத்திய அரசிடம் அதிக நிதி பெற்றுத்தந்தோம்.

நானும் ஒரு விவசாயி, விவசாயம் தான் எனது பிரதான தொழில்.

அ.தி.மு.க. ஆட்சியில் சொட்டு நீர் பாசனத்திற்கு மத்திய அரசிடம் அதிக நிதி பெற்றுத்தந்தோம்.

தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.

சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தில் தொடங்கினார்.

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

* நானும் ஒரு விவசாயி, விவசாயம் தான் எனது பிரதான தொழில்.

* அ.தி.மு.க. ஆட்சியில் சொட்டு நீர் பாசனத்திற்கு மத்திய அரசிடம் அதிக நிதி பெற்றுத்தந்தோம்.

* விவசாயிகள் படும் கஷ்டங்களை அனுபவரீதியாக நான் உணர்ந்திருக்கிறேன்.