படப்பிடிப்பில் ஷாருக் காயம்: சிகிச்சைக்கு அமெரிக்கா விரைந்தார்..

பிரபல ஹிந்தி நடிகரான ஷாருக் கான், கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர்கள் அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார்.
கிங் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இந்த படத்திற்கான சண்டை காட்சி, மும்பையில் உள்ள 'கோல்டன் டொபாக்கோ' ஸ்டுடியோவில் நடந்து வந்தது. இதில் பங்கேற்ற ஷாருக் கான் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது..
மும்பையில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இருப்பினும், அவருக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
படப்பிடிப்பு தளத்தில் இருந்தோர் கூறுகையில், 'பெரிய அளவில் அவருக்கு காயம் ஏற்படவில்லை. முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான சிகிச்சைக்கு ஷாருக், அமெரிக்கா சென்றுள்ளார். ஒரு மாதம் ஓய்வு எடுக்கச் சொல்லி டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்' என தெரிவித்தனர்.
ஷாருக் கான் காயமடைந்ததை அடுத்து, கிங் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..