முதல் முறையாக கட்சி மேடையில் ராமதாஸ் மகள் ஸ்ரீ காந்தி: தந்தைக்கு துணையாக நேரடி அரசியல்

முதல் முறையாக கட்சி மேடையில் ராமதாஸ் மகள் ஸ்ரீ காந்தி: தந்தைக்கு துணையாக நேரடி அரசியல்
முதல் முறையாக கட்சி மேடையில் ராமதாஸ் மகள் ஸ்ரீ காந்தி: தந்தைக்கு துணையாக நேரடி அரசியல்

இந்தச் செயற்குழுக் கூட்டத்தில், 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அன்புமணி ராமதாஸ்க்கு எதிராகவும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் நீடித்து வரும் சூழலில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் பாமக செயற்குழு இன்று (ஜூலை 8) கூடியது.

இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச் செயலாளர் முரளிசங்கர், இணை பொதுச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான அருள், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பாமக முன்னாள் மாநிலத் தலைவர் தீரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். மேடையில் வைக்கப்பட்ட பேனரில், அன்புமணி பெயரோ, படமோ இடம்பெறவில்லை.

இந்தச் செயற்குழுக் கூட்டத்தில், 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அன்புமணி ராமதாஸ்க்கு எதிராகவும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முக்கிய அம்சமாக இந்த செயற்குழு கூட்டத்தில் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தியும் வந்திருந்தார். கூட்டம் துவங்கியபோது, திடீரென பாமக நிர்வாகிகள் அவரை அழைத்து மேடையில் அமர வைத்தனர்

கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ. அருள்; ’பொதுவாகவே, ஆணை விடப் பெண்கள் உயர்ந்தவர்கள் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. ஒரு தந்தைக்கு மனவருத்தம் ஏற்படும்போது, ஒரு பெண் சிங்கம் போல எழுந்து துணை நிற்பாள் என்பது அனுபவ உண்மை. தற்போது நம் மரியாதைக்குரிய மருத்துவர் ஐயாவுக்கு ஏற்பட்டிருக்கும் மனவலியைப் போக்க, 24 மணி நேரமும் தனது தந்தையுடன் உடனிருந்து, அன்புடன் அரவணைக்கும் ஸ்ரீகாந்தி அக்காவுக்கு முதலில் எனது அன்பான வணக்கங்கள். 

மருத்துவர் ஐயாவின் முதுகெலும்பு என்று ஸ்ரீகாந்தி அக்காவையே சொல்லலாம். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பேட்டியில், "உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு யாருக்கு மிகவும் பிடித்திருக்கிறது?" என்று கேட்டபோது, "எனது மூத்த மகள் ஸ்ரீகாந்தி" என்று மருத்துவர் ஐயா குறிப்பிட்டிருக்கிறார். அன்று அவர் சொன்ன வார்த்தைகள் இன்று உண்மையாகியிருக்கின்றன.