மணி பிளான்ட் மகிமை.. வீட்டில் அதிர்ஷ்டம், யோகம் பெருக இந்த செடிகளை தூக்கி தூர போடுங்க! வாஸ்து டிப்ஸ்

சென்னை: சென்னை: வீட்டுக்குள் செல்வம் கொழிக்க வேண்டுமானால், ஒரு சில செடிகளை வளர்க்க வேண்டும் என்பார்கள்.. அதேசமயம், வீட்டில் ஆரோக்கியமும், நிதி நிலைமையும் சீராக இருக்க வேண்டுமானால், ஒருசில செடிகளை வளர்க்க கூடாது என்பார்கள். அந்தவகையில் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம், எந்தெந்த செடிகளை வளர்க்கக்கூடாது என்பது குறித்து வாஸ்துவில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.. அவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
பொதுவாக, வாஸ்து செடிகளை வீட்டிற்குள் வளர்ப்பதற்கு அறிவியல் காரணமும் உண்டு.. ஆன்மீக காரணமும் உண்டு.
உதாரணத்துக்கு மணி பிளாண்ட் எடுத்துக் கொண்டால், காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மாடிகைடு, பென்சைன் போன்ற நச்சுக்களை ஈர்த்துக்கொண்டு, ஆக்சிஜனை வெளியிடும்.
டிவி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களிலிருந்து வெளியிடும் கதிர்வீச்சுக்களையும் மணிபிளாண்ட் தன்னுள் இழுத்துக் கொள்ளும். இந்த செடியை வளர்ப்பதால், செடி நேர்மறை எண்ணங்கள் வீட்டிற்குள் வரும். எனவே, ஹாலில், தென்கிழக்கு மூலைகளில் இந்த செடி வளர்க்கலாம்.
மல்லிப்பூ செடியை எடுத்துக் கொண்டால், வீட்டிற்குள் அதிர்ஷ்டம் பெருகும்.. எங்கெல்லாம் நல்ல வாசனை உள்ளதோ, அங்கெல்லாம் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள் என்பது நம்பிக்கையாகும். எனவே மல்லிகை செடியை வாசலில் வைப்பது, நேர்மறையான ஆற்றலை அதிகரிக்க செய்யும்..
மூங்கில் செடியும், வீட்டுக்குள் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், புகழ், பணத்தை கொண்டு வருகிறது. எனவே இந்த செடியையும், ஹாலில், , கிழக்கு அல்லது தென்கிழக்கில் வைக்கலாம்.
பாசிடிவ் எனர்ஜி தரும் கற்றாழை செடிகள், அதிர்ஷ்டத்தையும் தரக்கூடியது.. பதவி உயர்வு வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கற்றாழை செடி பயனுள்ளதாக இருக்கும்.. வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் அதனை கற்றாழை நீக்கிவிடும்.. ஆனால், இந்த கற்றாழை செடியை, வடமேற்கு திசையில் நடக்கூடாது.. எப்போதுமே வீட்டின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் கற்றாழை செடியை நடவேண்டும்.
மன அழுத்தத்தை தரக்கூடிய லாவண்டர் செடிகளை, பெட்ரூமில் ஓரமாக வைத்து வளர்க்கலாம்.. இது குடும்ப உறவை வலுப்பெற செய்யும்.. காற்றை சுத்திகரிப்பு செய்து, சுத்தமான காற்றை தரக்கூடிய அமைதி லில்லி செடிகளையும் பெட்ரூமிலேயே வைத்து வளர்க்கலாம்.. பிசினஸ்மேன், வீட்டிற்குள் பணம் வரவு அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ரப்பர் செடியை தென்கிழக்கு திசையில் வைத்து வளர்க்கலாம்.
அதேபோல, சில செடிகளை வீட்டில் வளர்க்கக்கூடாது என்பார்கள்.. உதாரணத்துக்கு ரோஜா தவிர மற்ற முள்செடிகளை வீட்டில் வைக்கக் கூடாது... அதேபோல,
எப்போதுமே வட கிழக்கு திசையில் பெரிய மரங்களை வைப்பது நெகட்டிவ் எனர்ஜியை வீட்டில் அதிகரிக்க செய்யும்.
அந்தவகையில், கருவேல மரம், பருத்தி செடி, பனை மரம், போன்றவற்றை வீட்டை சுற்றி வளர்க்க கூடாது.. பனைமரம் இருக்கும் வீட்டில் பணப்பற்றாக்குறையை தந்துவிடும்..
இலந்தை மரத்தை வளர்த்தால், வீட்டின் அமைதியையே சீர்குலைக்கும்... துரதிர்ஷ்டத்தையும், கஷ்டத்தையும் தந்துவிடுமாம்..
சிவப்பு பூக்களை கொண்ட செடிகள், போன்சாய் மரங்கள் போன்றவை வீட்டிற்குள் வைக்கக்கூடாது.. புளியமரம், மருதாணி செடி போன்றவற்றையும், வீட்டிற்கு அருகில்கூட வைக்கக்கூடாதாம்.. அதேபோல காய்ந்து, வறண்டு, சருகாகிப்போகும் செடிகளையும் வீட்டை சுற்றி வளர்க்கக்கூடாது என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்