இதுக்கு மேல என்னங்க வேணும்.. மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி! உச்சவரம்பை உயர்த்திய அரசு! சூப்பர்...

சென்னை: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில், 31.3.2021 அன்று நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.2,118.80 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு 1,01,963 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 10,56,816 மகளிர் பயன்பெற்றுள்ளனர் என தமிழக அரசு கூறியுள்ளது. மேலும், களிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.20 இலட்சம் என்பதை ரூ.30 இலட்சமாக உயர்த்தி 1,90,499 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10,997.07 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது....
இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இருக்கும் மாநிலங்களில் மகளிர் முன்னேற்றத்திற்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அவர்களது வாழ்வாதாரம் இன்னும் உயரவில்லை என்பது மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது....
ஆனால் தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் பெண்களின் வாழ்வாதாரம் கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் மகளிர் சுய உதவி குழு திட்டம். மகளிர் யாருடைய ஆதரவும் இன்றி சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருகிறது....
தமிழகத்தில் முதல்முறையாக 1989 ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழு இயக்கப்பட்டது. அதற்குப் பிறகு மிகப் பெரிய வளர்ச்சியை பெற்று இந்தியா முழுவதும் அந்த திட்டம் பரவி இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி அளித்து வருகின்றனர். மிகக் குறைந்த வட்டியின் வழங்கப்படும் இந்த கடனை பெற்று மகளிர் தொழில் செய்து அதனை அடைக்கலாம். இதனால் அவர்களது வாழ்வாதாரமும், குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் உயரும்....
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ஏழை மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக 14 ஆயிரத்து 684 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் இதுவரை 1 லட்சத்து 82 ஆயிரத்து 274 சுய உதவி குழுக்களுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது...
இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் ரத்து செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் திமுக ஆட்சி அமைந்த உடனேயே கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு கடன்களில் 31.03.2021 அன்று நிலுவையில் இருந்த கடன் தொகையான சுமார் 2000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 63 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 10 லட்சத்து 56 ஆயிரத்து 816 மகளிர் பயன் பெற்றனர்....
மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்சவரம்பு 20 லட்சம் என்ற நிலையில் இருந்த நிலையில் தற்போது அது 30 லட்சம் ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 499 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இதுவரை 1097 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது என தமிழக அரசு கூறியுள்ளது....