சொன்னபடி செஞ்சிட்டாங்களே.. 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி.. ஸ்டாலின் சிக்ஸர்.. ரூ.6000 கோடி தள்ளுபடி!

சென்னை: நகை கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருந்த நிலையில், அந்த நகை கடன்கள் வெற்றிகரமாக தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ரூ. 6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது...
கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்று, 31.03.2021 வரை நிலுவையிலிருந்த நகைக் கடன் ரூ. 6,000 கோடி தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டது. அதன்படி, 11.70 இலட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி அளவிற்குத் தள்ளுபடிச் சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டுள்ளன. வெற்றிகரமாக இந்த நகைகள் அனைத்தும் மக்களிடம் வழங்கப்பட்டது..
காலி "
5 சவரன் வரையிலான கூட்டுறவு நகை கடன்களை தள்ளுபடி செய்வதற்காக மொத்தம் 51 விவரங்களை பயனாளிகளிடம் இருந்து தமிழ்நாடு அரசு பெற்றது. இதன் அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 5 பவுன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 13ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். தேர்தலின் போது திமுக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி தீவிரமாக எழுந்து வந்தது. பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது..
தகுதியின் அடிப்படையில் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் அதன்பின் வெளியிடப்பட்டது. நகை கடன் மற்றும் மற்ற அடிப்படை விவரங்கள் தொடர்பாக கடந்த ஆட்சியில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. இது போன்ற முறைகேடுகளை தவிர்க்க எதிர்காலங்களில் வங்கி கணக்குகள், விவரங்கள் எல்லாம் கணினியில் ஏற்றப்படும்.
அதோடு கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு கோர் அடிப்படையில் இனி கூட்டுறவு வங்கிகள் செயல்படும். இது வங்கிகள் செயல்படுவதை எளிதாக்கும். முறையான தகுதியின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலை அடிப்படையாக வைத்தே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இப்படி நகை கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருந்த நிலையில், அந்த நகை கடன்கள் வெற்றிகரமாக தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ரூ. 6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது...
எப்படி நீக்கப்பட்டது?
பயனர்கள் எப்படி தேர்வு செய்யப்பட்டார்கள் என்று பார்க்கலாம்,
1. மொத்தம் 51 தகவல்களை வைத்து பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்
2. நகைக்கடன் வாங்கியவர்கள் பெயர். 5 சவரனுக்கு உள்ளே எவ்வளவு நகையை வைத்து கடன் வாங்கி இருக்கிறார்கள். கணக்கு எண், ஆதார் எண், கூட்டுறவு சங்க விவரம் உள்ளிட்ட தகவல்களை சேகரித்துள்ளனர்...
3. இந்த தகவல்களை வைத்து பயனர்கள் தகுதியின் அடைப்படையில் குழுவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த லிஸ்ட் மொத்தமும் கணினியில் ஏற்றப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், வருமான குறைவான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. 2021ம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி வழங்கியதில் பயன் பெற்றவர்கள் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் பலர் இருந்தனர். அது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கவே இந்தமுறை 50க்கும் மேற்பட்ட விவரங்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது...