பெயர் பலகை இல்லாமல் சென்ற அரசு பேருந்து- நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர்..

அரசு பேருந்தில் பெயர் பலகை இல்லாமல் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுரை வழங்கினார்.
ஆம்னி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் அதனை எடுக்குமாறு ஓட்டுனர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் அவ்வப்போது திடீர் கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த முறை அரியலூர் அருகே ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சிவசங்கரை யார் என்று அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் அடுத்து சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பெயர் பலகை இல்லாமல் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுரை வழங்கினார்.
ஆம்னி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் அதனை எடுக்குமாறு ஓட்டுனர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.