எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலை.. மதுரையில் பணி நியமனம்.. அசத்தல் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க..

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலை.. மதுரையில் பணி நியமனம்.. அசத்தல் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க..
மதுரையில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது..

மதுரை: மதுரையில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவி்பபுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள வேலைவாய்ப்பு குறித்த முக்கிய விவரங்கள் வருமாறு...

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு நம் நாட்டின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரையில் எச்சிஎல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது...

தற்போது மதுரையில் உள்ள அலுவலகத்துக்கு தான் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து தற்போது ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர்(Java Full Stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்...

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 8 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் சில முக்கிய திறமைகள் இருக்க வேண்டும். அதன்படி Backend-ல் Java, Spring Boot, Microservices உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். Frontend-ல் Angular/React, HTML, CSS உள்ளிட்டவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும் ...

பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை...

இதனால் விண்ணப்பத்துக்கான கால அவகாசம் எப்போது வேண்டுமானாலும் முடியலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. விண்ணப்பிக்க நினைப்போர் கீழே உள்ள அறிவிப்பின் மூலமாக விண்ணப்பம் செய்யலாம்...