இபி பில் ஏறுதே.. சாதாரண மீட்டர் 11.50 லட்சம்? ஸ்மார்ட் மீட்டர் என்னாச்சு? மின்சார வாரியம் சொல்வதென்ன

இபி பில் ஏறுதே.. சாதாரண மீட்டர் 11.50 லட்சம்? ஸ்மார்ட் மீட்டர் என்னாச்சு? மின்சார வாரியம் சொல்வதென்ன
ஸ்மார்ட் மீட்டர் என்னாச்சு? மின்சார வாரியம் சொல்வதென்ன

சென்னை: தமிழகத்தில் எப்போது ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமலாகும் என்ற எதிர்பார்ப்பு நுகர்வோர்களிடம் ஏற்பட்டு வருகிறது.. கடந்த பிப்ரவரி மாதம், ரூ.3.04 கோடி, ஸ்மார்ட் மீட்டர் பொருத்த, டெண்டர் கோரப்பட்டிருந்த நிலையில் தற்போது அதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. 11.50 லட்சம் ஒரு முனை, மும்முனை சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின்சார வாரியம் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில்,ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்னாச்சு என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழக மின்சார வாரியத்தை பொறுத்தவரை, மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் திடமாக இருந்து வருகிறது.. அதனால்தான், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திலும், வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்வதுடன், செலவினங்களும் குறையும் என்று நம்புகிறது.

ஏனென்றால், மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதில், அனைத்து மின் இணைப்புகளிலும், 'ஸ்டேடிக் மீட்டர்' பொருத்தப்பட்டிருக்கிறது.. இந்த மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டு விவரத்தை, ஊழியர்கள் கணக்கெடுத்து வந்தாலும், இதில் தவறுகள் நடப்பதாக , பொதுமக்கள் புலம்பி வருகிறார்கள்..

எனவேதான், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. பிறகு ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்தாகியிருந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் மீண்டும் டெண்டர் விடுத்து, தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டிருந்தது...

அதன்படி 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தி, அவற்றை 93 வருடங்களுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய இந்த டெண்டர் கோரப்பட்டிருந்தது.

இதில், நிறுவனங்கள் பங்கேற்க, இம்மாத இறுதி வரை அவகாசம் உள்ளது.

இந்நிலையில், தற்போது 160 கோடி ரூபாய் செலவில், ஒரு முனை பிரிவில் 8 லட்சம் மீட்டர்களும், மும்முனை பிரிவில் 3.50 லட்சம் மீட்டர்களும் வாங்க, தலா 6 நிறுவனங்களுக்கு பணி ஆணைகளை மின் வாரியம் சமீபத்தில் வழங்கியுள்ளது...

அதேசமயம், ஏற்கனவே, ஸ்மார்ட் மீட்டர் வாங்க டெண்டர் கோரப்பட்டிருக்கிறது.. அப்படியிருக்கும்போது, எதற்காக சாதாரண மீட்டர் வாங்க முடிவெடுக்க வேண்டும்? இதனால் இப்போது வாங்கப்பட உள்ள மீட்டர்கள் வீணாகலாம் என்றும், அதற்கான செலவு தேவையற்றது என்றும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

புதிய மின் இணைப்பு

எனினும் இது குறித்து, மின் வாரிய அதிகாரிகள் தரப்பில் சொல்லுபோது, "புதிய மின் இணைப்பு கேட்டு, 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், மீட்டர் தேவைப்படுகிறது.. ஆகவேதான், ஒருமுனை மற்றும் மும்முனை பிரிவுகளில், 11.50 லட்சம் மீட்டர்கள் வாங்க முடிவாகியுள்ளது

அதேசமயம், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டுவர உள்ளதால், சாதாரண மீட்டர் கொள்முதல் குறைக்கப்பட்டது. எனினும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் தொடர்பான சந்தேகங்கள் தற்போது நிலவுவதால், டெண்டரில் பங்கேற்க அவகாசம் தரப்பட்டிருக்கிறது.. எனவே, தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்து, திட்டத்தை துவக்கி, அனைத்து இணைப்புகளிலும் மீட்டரை மாற்ற, எப்படியும் ஒரு வருடம் ஆகலாம்" என்று தெரிவித்துள்ளார்கள்..

அதிகாரிகள் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் வேலை துரிதமாகியிருப்பதாகவே தெரிகிறது.

ஸ்மார்ட் மீட்டர் பயன்பாடுகள்

ஸ்மார்ட் மீட்டரை பொறுத்தவரை, மாதந்தோறும் கணக்கெடுக்கும் தேதி, சாப்ட்வேர் வடிவில் அப்லோடு செய்யப்பட்டு, தொலைதொடர்பு வசதியுடன், அலுவலக, சர்வரில் இணைக்கப்படுவதால், குறிப்பிட்ட தேதி வந்ததுமே, தானாகவே கணக்கெடுத்து, நுகர்வோருக்கு கட்டணத்தை அனுப்பி வைத்துவிடும்.

இதற்காகவே, 4ஜி அலைவரிசையில் இயங்கும் வகையில் சிம்கார்டுகள், மின் கணக்கீட்டுக்கு புதிய சாப்ட்வேர்கள் போன்றவை பயன்படுத்தி ஆளில்லா மின்பயன்பாடு கணக்கெடுக்கப்படும்.. வீடு வீடாக ஊழியர்கள் ரீடிங் எடுக்க வேண்டியிருக்காது.. SMS மூலமே, பில் சென்றுவிடும்..

மின்சார திருட்டு, கரண்ட் கட், போன்ற புகார்களையும் ஸ்மார்ட் மீட்டர் மூலமே பதியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.