முன்னர்பிரிக்ஸ் உச்சி மாநாடு: பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோதி

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை கலிலியோ சர்வதேச விமான நிலையத்தை அவர் அடைந்தார்.
17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், அமைதி, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவது, உலக சுகாதாரம், காலநிலை மாற்றம், பொருளாதார மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து மோதி பேசுவார் என ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
மேலும், பிரேசில் அதிபர் லூலாவுடன் வணிகம், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருநாட்டு பேச்சுவார்த்தையை மோதி நடத்தவுள்ளார்.
பிரதமர் மோதி ஐந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கான தன் எட்டு நாள் பயணத்தை ஜூலை 2 அன்று தொடங்கினார். முதலாவதாக கானா நாட்டுக்கு சென்ற மோதி, பின்னர் டிரினிடாட், டொபாகோ, அர்ஜெண்டினா சென்றார். அர்ஜெண்டினாவில் அதிபர் ஜாவியெர் மிலெயுடன் இருநாட்டு பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு அவர் பிரேசில் சென்றார். பிரேசிலில் இருந்து ஜூலை 9 அன்று நமீபியா செல்லும் மோதி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருக்கிறார்.