2019-ல் அறிவிக்கப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படவில்லை - பவானி நதிநீர் பாதுகாப்பு குழு குற்றச்சாட்டு

தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியுடனான கலந்துரையாடலில் 2019-ல் அறிவிக்கப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்று பவானி நதிநீர் பாதுகாப்பு குழு குற்றச்சாட்டியுள்ளது.

தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் தனது பரப்புரை சுற்றுப் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினார்.

தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். 

அப்போது பேசிய ம.தி.மு.க சொத்துப்பாதுகாப்பு குழு உறுப்பினரும், பவானி நதிநீர் பாதுகாப்பு குழு நிர்வாகியுமான டி.டி.அரங்கசாமி 60 ஆண்டு காலமாக திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டம் 2019-ல் அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி பேசினார்.

அப்போது, குறுக்கிட்டு பேசிய இ.பி.எஸ் திட்டம் குறித்து மத்திய அரசுக்கு அனுப்பிய போது அவர்கள் நிராகரித்து விட்டார்கள் என்றார்.