திமுக, பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தவெக தலைவர் விஜய்

திமுக, பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தவெக தலைவர் விஜய்
முன்னர்திமுக, பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை

தவெக தலைமையில் அமையும் கூட்டணி, திமுக, பாஜகவுக்கு எதிரானதாகத்தான் இருக்கும், அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், முதல்வர் வேட்பாளர் விஜய்தான் என்றும், கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கே முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து, செயற்குழுவில் பேசிய விஜய், "கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயத்துக்காக மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தி வேற்றுமையை ஏற்படுத்துகிறது பாஜக. அவர்களின் விஷமத்தனமான வேலைகள் தமிழகத்தில் எடுபடாது. பெரியாரையும் அண்ணாவையும் அவமதித்து அரசியல் செய்தால், பாஜக ஒருபோதும் வெற்றி பெற இயலாது.

சுயநல அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவுடன் கூட்டணி வைக்க தமிழக வெற்றிக் கழகம் ஒன்றும் திமுகவோ அதிமுகவோ இல்லை. அவர்களுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை என்பதில் தவெக உறுதியாக இருக்கிறது. தவெக தலைமையில் அமையும் கூட்டணி, திமுக, பாஜகவுக்கு எதிரானதாகத்தான் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூ

றினார்.