பிரேசிலுக்கு 50% வரி டிரம்ப் அச்சுறுத்தல்

பிரேசிலிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
பிரேசில் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், முன்னாள் பிரேசில் அதிபரும் வலதுசாரி தலைவருமான ஜெய்ர் போல்சனாரோவை அந்நாட்டு அரசு குறிவைப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்,
2022 தேர்தல் முடிவுகளை மாற்ற சதித்திட்டம் தீட்ட குற்றச்சாட்டின் பெயரில் போல்சனாரோ வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்