புதுச்சேரி டூ கேரளா-மகாராஷ்டிர மாநிலத்துக்கு விமான சேவை... என்ன பயன்கள்...!

புதுச்சேரி டூ கேரளா-மகாராஷ்டிர மாநிலத்துக்கு விமான சேவை... என்ன பயன்கள்...!
புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து மகராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்களுக்கு விமான சேவை

புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து மகராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்களுக்கு விமான சேவை இயக்குவதற்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்த விமான சேவைகளால் புதுச்சேரி மாநில மக்களுக்கு என்ன பயன்கள் மற்றும் வசதிகள் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்..

புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து...

புதுச்சேரி மாநிலத்தில் லாஸ்பேட்டை என்ற பகுதியில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஆகிய மாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து மேலும் பல்வேறு மாநிலங்களுக்கு விமான சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு புதுவை மாநில அரசு திட்டமிட்டது. இதற்காக அருகில் உள்ள தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் இருந்து நிலத்தை வாங்குவதற்கு தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறது.

புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து மகராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்களுக்கு விமான சேவை இயக்குவதற்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்து.இந்த விமான சேவைகளா புதுச்சேரி மாநில மக்களுக்கு என்ன பயன்கள் மற்றும் வசதிகள் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில்பார்க்கலாம்.

புதுச்சேரி மாநிலத்தில் லாஸ்பேட்டை என்ற பகுதியில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஆகிய மாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து மேலும் பல்வேறு மாநிலங்களுக்கு விமான சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு புதுவை மாநில அரசு திட்டமிட்டது. இதற்காக அருகில் உள்ள தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் இருந்து நிலத்தை வாங்குவதற்கு தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறது.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் விளக்கம்

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புதுவை மாநில மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க பணிக்கான திட்டம் குறித்து கேட்டார். அப்போது, அவர், புதுச்சேரியில்இருந்து கேரள மாநிலம், கொச்சி மற்றும் மகாராஷ்டிரா மாநிலம், சீரடி ஆகிய இரு மாநிலங்களுக்கு புதிய விமான சேவையை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு விமான நிறுவனங்களின் விருப்பத்தின் பேரில், அனுமதி வழங்கப்படுதாக தெரிவித்தார்...

புதுச்சேரியில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்

மேலும், புதுச்சேரி விமான நிலையம் பகுதியில் நிலம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும். இதனால், புதுச்சேரி விமான நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதில், குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருகை தருவதற்கு வாய்ப்பு உள

மாஹி பிராந்தியத்தில் இருந்து வருவதற்கு...

மேலும், கேரள மாநிலத்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ள புதுவை மாநிலத்தின் பிராந்தியமான மாஹியில் இருந்து புதுச்சேரிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவதற்கு மிகுந்த வாய்ப்பாக கருதப்படுகிறது. மேலும், தொழில், வணிகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக புதுச்சேரியில் இருந்து கேரளத்துக்கும், மகாராஷ்டிரத்துக்கும் பொது மக்கள் சென்று வருவதற்கு வாய்ப்பாக அமையும். புதுச்சேரி மாநிலத்தில் பிரெஞ்சு நாட்டினர் வசித்து வருவதால் அவர்களும் புதுச்சேரி விமான நிலையத்தின் வழியாக வேறு மாநில விமான நிலையங்களுக்கு சென்று பிரான்ஸ் நாட்டுக்கு சென்று வருவதற்கு வசதியாக அமையும்.

விரைவில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள்...

மேலும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியை சுற்றி பார்க்க வருவதற்கும் இந்த விமான சேவை பெரிய வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க பணிகளில் தமிழக பகுதியில் இருந்து சுமார் 217 ஏக்கர் நிலம் கிடைக்கும் பட்சத்தில் அதற்கான அனுமதி பெற்று பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. இந்த விமான நிலையத்தில் 2,300 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம் அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்திய விமான நிலைய ஆணையம்.