11 லட்சம், 18 பவுன் தங்கம் போதாது.. மாமனாரின் மட்டமான ஒப்பந்தம்.. அஸ்வினிக்கு நடந்தது என்ன?

11 லட்சம், 18 பவுன் தங்கம் போதாது.. மாமனாரின் மட்டமான ஒப்பந்தம்.. அஸ்வினிக்கு நடந்தது என்ன?
வரதட்சணை என்பது இந்தியா முழுவதுமே இன்று வரை தீர்க்க முடியாத பிரச்சனையாக இருக்கிறது.

திருப்பதி: வரதட்சணை என்பது இந்தியா முழுவதுமே இன்று வரை தீர்க்க முடியாத பிரச்சனையாக இருக்கிறது. ஒருபக்கம் பல ஆண்கள் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் அவதிப்படும் நிலையில், மறுபக்கம் பெண்கள் வரதட்சணை காரணமாக வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை, வேலூரில் அடுத்தடுத்து பெண்களுக்கு கடந்த மாதம் அநீதி நடந்தது. அதே பாணியில் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது..

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருமணம் ஆன புதிதில் அடுத்தது பெண்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன.. என்ன காரணத்திற்காக இந்த முடிவுகளை எடுத்தாலும் மிகவும் தவறு. வாழ்க்கையை அழித்துக்கொள்வதற்கு எவருக்குமே உரிமையில்லை.. இயற்கையாக நடக்க வேண்டியதை.. செயற்கையாக விதியை முடிக்கிறார்கள்..கணவனின் தவறுகள், அவர்களை அந்நிலைக்கு தள்ளியதாக கூறினாலும். அவர்கள் செய்வதை ஏற்கவே முடியாது.. சின்ன சின்ன பிரச்சனைக்கு எல்லாம் தவறான முடிவெடுப்பது அதிகரிக்கிறது. சிலர் பெரிய சிக்கல்களை கையாள வழி தெரியாமல் முடிவெடுக்கிறார்கள். அதேபோல் வரதட்சணை கொடுமை தாங்காமலும் முடிவெடுக்கிறார்கள். ஆந்திர மாநிலத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது...

ஆந்திர மாநிலம் மல்லம்பேட்டையை சேர்ந்த சாய்ராம் என்பவருக்கு பட்டான்செருவை சேர்ந்த 25 வயதாகும் அஸ்வினி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று வயதில் மகள் உள்ளார். நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் மகள் கண் முன்னாலேயே மின்விசிறியில் புடவையால் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்...

அஸ்வினியின் மகள் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் குடும்பத்தினர் அறைக் கதவை திறக்க முயன்றபோது உள்ளே தாழிட்டிருப்பது தெரிந்தது. ஜன்னலை திறந்து பார்த்தபோது அவர் மின்விசிறியில் தொங்கி கொண்டிருந்தது தெரிந்தது.இதுபற்றி உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஸ்வினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...

அஸ்வினிக்கு திருமண சமயத்தில் 12 லட்சம் வரதட்சணையாக கொடுப்பதாக கூறி 11 லட்சம் ரூபாய் மற்றும் 18 சவரன் தங்க நகைகளை கொடுத்துள்ளார்களாம். எஞ்சிய ஒரு லட்சத்தை வட்டியுடன் தரவேண்டும் என்று மாமனார் கிருஷ்ணா ஒப்பந்தம் செய்திருந்தாராம்.. இந்நிலையில் வரதட்சணை பணத்தை கொண்டு வரும்படி மருமகள் மீது மாமனார்-மாமியார் நெருக்கடி கொடுத்து வந்தார்களாம். இதனால் மனம் உடைந்த அஸ்வினி வாழ்க்கையை முடித்துக் கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அஸ்வினியின் கணவர் மற்றும் மாமனார்-மாமியாரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...