சில்லு சில்லாக போன 500 கோடி.. 5 ஏக்கர் பங்களாவில் வாழ்ந்த நடிகரின் பரிதாபம்.. சிவகுமார் சொல்லியுமா

சென்னை: சினிமா தயாரிப்பு என்பது மிகமிக சிரமமான விஷயம்.. ஆரம்பத்தில் சர்க்கரை போல இனிக்கும் என்றாலும் போகப்போக, சர்க்கரை நோயாளி, சர்க்கரையை சாப்பிட முடியாத நிலைமை போல ஏற்பட்டுவிடும். சினிமா வேண்டாத பொருளாகிவிடும்.. அப்படியிருக்கும்போது, யாருமே கை கொடுத்து உதவ மாட்டார்கள்.. இதுபோன்ற சூழ்நிலையில்தான், மாதம்பட்டி சிவக்குமாரும் சிக்கிவிட்டார்.. 2 படங்களில் தன்னுடைய சொத்துக்களை இழந்துவிட்டார் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
Media circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவக்குமார் என்பவர் மிகப்பெரிய ஜமீன்தார்.. இவரது அப்பா நடராஜ கவுண்டர், மிகப்பெரிய ஆளுமையாக அவரது ஊரில் இருந்துள்ளார்.. 5 ஏக்கராவில் இவர்களது வீடு இருந்தது.. அரண்மனை போல இருக்கும்.. இன்றும் அந்த வீடு உள்ளது.. இதனை இப்போது கேரளாவை சேர்ந்தவர்கள் வாங்கியிருப்பதாக தெரிகிறது. களிமண் பொம்மை செய்யும் தொழிற்சாலை அங்கு நடக்கிறது
மாதம்பட்டி சிவக்குமாரின் அப்பாவை, அந்த ஊர்க்காரர்கள் எல்லாருமே முதலாளி என கூப்பிடுவார்கள்.. ரஜினி நடித்திருந்த எஜமான் படம், இவரது இன்ஸிபியரேஷனில் உருவான படமாகும்.. 500 ஏக்கருக்கு விவசாய நிலம் இருந்தது.. 14 பஸ் ஓடிட்டு இருந்தது.. கோவை, திருப்பூரில் 10 பங்களாக்கள் இருந்தன..