தென்னை விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி

தென்னை விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி
தென்னை பயிர்ச்செய்கையை பாதிக்கும் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில்,அதனை கட்டுப்படுத்த இரண்டு வார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் வடக்கு மாகாண பணிப்பாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார்.

****AGNISIRAGU****

நல்லூரடியில் (Nallur) உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “தென்னை உற்பத்தியில் வெள்ளை ஈயானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தென்னை வளர்ப்பாளர்கள் பல்வேறு அசோகரியங்களை எதிர் நோக்குகின்றார்கள். 

அந்தவகையில் சாவாகச்சேரி, உடுவில், கோப்பாய், நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற 5 பிரதேச செயலர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

மேற்குறித்த 5 பிரதேச செயலர் பிரிவுகளிலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

மேற்குறித்த ஐந்து பிரதேச செயல பிரிவுகளிலும் உள்ள அனைத்து தென்னை மரங்களுக்கும் வெள்ளை ஈயினை கட்டுப்படுத்தும் திரவ கரைசலை விசிறவுள்ளோம். இதற்காக 200 விசிறும் இயந்திரங்களை பயன்படுத்த உள்ளோம். ஒரு இயந்திரத்தால் ஒரு நாளைக்கு 90 மரங்களுக்கு கரைசலை விசிற முடியும். அதற்கு ஏற்ப திட்டமிட்டுள்ளோம்.

****AGNISIRAGU****