தேங்காய் எண்ணெய் விலை கட்டுப்படுத்த கேரளா ஆலோசனை.

கேரள தொழில்துறை அமைச்சர் ராஜிவ், உணவு மற்றும் பொது விநியோக திட்ட அமைச்சர் அனில் ஆகியோர், 60க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் வியாபாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, கேரள அரசின் 'சப்ளைகோ' சில்லரை விற்பனை நிலையங்களில் தேங்காய் எண்ணெய் விற்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான ஏலத்தில் பிராண்டடு தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யும் வியாபாரிகள் பங்கேற்க வேண்டும். ஏலத்தில் வெற்றி பெறுவோருக்கு 15 நாட்களுக்குள் பணம் செலுத்தப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
மேலும், வெளிச்சந்தையில் இருந்து இறக்குமதியை அனுமதித்தால், நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும்; எனவே, விவசாயிகளின் லாபம் குறையாமல், எண்ணெய் விலையை குறைக்க வழிகளை கண்டறியுமாறு, வியாபாரிகளை கேட்டுக்கொண்டனர்.