தங்கத்தை விடவும் மதிப்பு.. ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக வேண்டிய குடும்பம்.. இப்போது புழல் சிறையில்

தங்கத்தை விடவும் மதிப்பு.. ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக வேண்டிய குடும்பம்.. இப்போது புழல் சிறையில்
யானை என்பது இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று போற்றப்படுகிறது.

சென்னை: என்றோ வாங்கி வைத்த ஒரு பொருள், தங்கத்தைவிட மதிப்பு அதிகமாக இருந்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் ஒருவருக்கு நடந்துள்ளது. ஆனால் அவர் செய்தது சட்டவிரோதமான செயல். அதன் காரணமாக சிறையில் தற்போது கம்பி எண்ணி வருகிறார். அவரோடு சேர்ந்து 8 பேர் சிக்கியுள்ளார். செங்கல்பட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது

விலங்கு இனங்களில் மிகப்பெரிய உயிரினமான யானை எங்கு இருக்கிறதோ, அங்கு ஒரு காடு உருவாகிவிடும்.பொதுவாக யானைகள் காட்டில் தான் இருக்கும். யானைகள் தான் காடுகள் செழிப்பாக இருக்க காரணம் ஆகும். ஏனெனில் யானைகள் சாப்பிடும் உணவும், அவை போடும் சானமும் அதிகப்படியான புதிய செடிகள் உருவாகவும், காடுகள் செழிப்பாக இருக்கவும் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது

யானை என்பது இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று போற்றப்படுகிறது. யானை உயிருடன் இருக்கும் போது என்ன மதிப்புஇருக்கிறதோ, அவை இல்லாமல் போனாலும் அதற்கு மதிப்பு அதிகம். அதன் தந்தங்கள் தங்கத்தைவிடவும் விலை மதிக்க முடியாதவை ஆகும்.யானை தந்தத்தை கோடிகள் கொடுத்து வாங்கி வைத்துக் கொள்ள பல வெளிநாட்டவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

யானை தந்தங்கள் மிக குறைவாக வருவதால் அதனை எவ்வளவு கோடி கொடுத்தும் வாங்கி விற்க கடத்தல்காரர்கள் முயல்கிறார்கள். பணக்கார தங்கள் வீடுகளில் ஆடம்பர கலாச்சார பொருளாக யானை தந்தங்கள் இருக்கின்றன. இதற்காகவே உலகம் முழுவதும் யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்கிறது. இந்தியாவிலும் அவ்வப்போது யானைகள் வேட்டையாடப்படுவது நடக்கிறது.. ஆனால் யானைகள் வேட்டையாடப்படுவது மட்டுமின்றி, அதன் தந்தங்களை விற்பதும், வாங்குவதும் இந்தியாவில் பெரிய குற்றம் ஆகும். யானை தந்தங்கள் எந்த ஆண்டு வாங்கி வைத்திருப்பது தெரிய வந்தாலும் சிறைக்கு தான் போக வேண்டியதிருக்கும். இந்நிலையில் செங்கல்பட்டு பரனூரில் யானை தந்தத்தை கடத்த முயன்றவர்கள் சிக்கியுள்ளனர்

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி ஸ்கார்பியோ கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் யானை தந்தம் கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கசாவடியில் செங்கல்பட்டு வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தத்தை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.