சூரி படிக்காதவரு.. அவரை மாதிரி சின்ன கேரக்டரில் நடிக்க மாட்டேன்! ஏன்னா நான்.. இன்ஸ்டா பிரபலத்தின் சர்ச்சை பேச்சு

சூரி படிக்காதவரு.. அவரை மாதிரி சின்ன கேரக்டரில் நடிக்க மாட்டேன்! ஏன்னா நான்.. இன்ஸ்டா பிரபலத்தின் சர்ச்சை பேச்சு
சோசியல் மீடியா மூலம் பிரபலமான டாக்டர் திவாகர் வாட்டர் மெலன் ஸ்டார்

சென்னை: சோசியல் மீடியா மூலம் பிரபலமான டாக்டர் திவாகர் வாட்டர் மெலன் ஸ்டார் என்று தனக்குத்தானே பட்டம் கொடுத்துக்கொண்டு ரீல்ஸ் வீடியோக்கள் போட்டு பிரபலமாகி கொண்டு இருக்கிறார். அவர் நடிகர் சூரி பற்றி பேசிய பேச்சு தான் சமூக வலைதளத்தில் ட்ரோல் ஆகி வருகிறது. அவர் பேசும்போது "நடிகர் சூரி சின்ன சின்ன கேரக்டர் எல்லாம் நடிச்சு தான் இப்போ பெருசா நடிக்கிறார். அவரை மாதிரி நான் நடிக்க மாட்டேன். ஏன்னா அவர் படிக்காதவரு, நான் நிறைய படித்து இருக்கிறேன்" என்று பேசி இருக்கிறார். இதனால் திவாகர் பற்றி சூரியின் ரசிகர்கள் அதிகமாக ட்ரோல் செய்து திட்டி வருகிறார்கள்

நடிகர் சூரி மதுரையை சேர்ந்தவர் ஆரம்பத்தில் எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று திரைப்படங்களில் சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருந்தார் நடிகராக மட்டுமில்லாமல் லைட் மேன் உட்பட பல வேலைகளையும் செய்திருந்தார். ஆனால் அவருக்கு பல வருடங்கள் கழித்துதான் ரசிகர்கள் மத்தியில் அடையாளம் கிடைத்தது. அதிலும் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா சாப்பிட்டு பேமஸ் ஆன சூரிக்கு பரோட்டா சூரி என்று பெயர் கிடைத்தது.

அதற்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு திரைப்படங்களில் துணை கேரக்டரில் நடித்து வந்தார். இப்போது மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதேபோல இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சோசியல் மீடியாவில் ரீல்ஸ் வெளியீட்டு பிரபலமான டாக்டர் திவாகர் தன்னை வாட்டர்மெலன் ஸ்டார் என்று அடையாளப்படுத்தி கொள்கிறார். இவர் நடிகர் சூர்யா நடித்த கஜினி திரைப்படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிட்டு கொண்டே தன்னுடைய பாதுகாவலர்களை ஒரு விரலால் மிரட்டுவது போன்றே நடித்து பிரபலமானவர்தான்.

அவர் இப்போது நடிகர் சூரியை தன்னோடு ஒப்பிட்டு பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் திவாகர் பேசும் போது "நான் ஏற்கனவே பெரிய படிப்பு படிச்சு இருக்கிறேன். சூரிக்கு படிப்பு இல்ல, அதனால பெயிண்ட் அடிக்கிற வேலை எல்லாம் செஞ்சு இந்த நிலைமைக்கு போயிருக்கிறது. ஆனால் நான் இருக்கிற நிலைமைக்கும் திறமைக்கும் 500 ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் என்னால் நடிக்க முடியாது, என்னால் கீழே இருந்தெல்லாம் வர முடியாது" என்று கூறியிருக்கிறார்.

இந்த பேட்டி வைரலாகி வருவதுடன் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். சூரியின் திரை வாழ்க்கை அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய உழைப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். சூரியும் தான் கடந்து வந்த கஷ்ட காலங்களை மறக்காமல் அடிக்கடி பதிவு வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு திரைப்பட இசை வெளியீட்டு விழா போன்ற வினாக்களில் கூட தன்னுடைய கடந்த காலம் குறித்து பேசி இருக்கிறார். அதோடு தனக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் குறித்தும் பெருமையாக பேசி இருக்கிறார்.