இதை பண்ணா போதும்! 10 நிமிடத்தில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்! அசத்தும் உங்களுடன் ஸ்டாலின்..

இதை பண்ணா போதும்! 10 நிமிடத்தில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்! அசத்தும் உங்களுடன் ஸ்டாலின்..
தமிழ்நாடு முழுக்க நடந்து வரும் உங்களுடன் ஸ்டாலின்...

சென்னை: தமிழ்நாடு முழுக்க நடந்து வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. விண்ணப்பம் செய்ய வருபவர்களுக்கு வெறும் 10 நிமிடத்தில் எல்லா பணிகளும் நிறைவு அடைவது மக்கள் இடையே கவனம் பெற்று உள்ளது...

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த ஜூலை 15ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்த முகாமிற்கு போனால் உங்கள் தேவைகளை உடனடியாக தீர்க்கும்படி எல்லா துறை அதிகாரிகளும் ஒரே இடத்தில் களமிறக்கப்பட்டு உள்ளனர். இதனால் எந்த ஒரு பிரச்சனையா இருந்தாலும் 1- 2 மணி நேரத்தில் தீர்க்க முடியும். தீர்க்கவே முடியாத பெரிய சிக்கல் உள்ள விவகாரங்களை கூட அதிகபட்சம் 45 நாட்களில் தீர்க்கும் வகையில் இந்த முகாமில் ஏற்பாடுகளை செய்து இருக்காங்க.

தமிழ்நாடு முழுக்க இதற்காக 10 ஆயிரம் முகாம்கள் தினமும் செயல்படுகிறது. நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகள் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகள் 46 சேவைகள் வழங்கப்படுகின்றன. மக்கள் எளிதாக பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 2025 முதல் நவம்பர் மாதம் 2025 வரை பத்தாயிரம் சிறப்பு முகாம்கள் செயல்படுகின்றன...

உங்களுடன் ஸ்டாலின் - மகளிர் உரிமை தொகை

தமிழ்நாடு முழுக்க நடந்து வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. அங்கே பணிகள் எப்படி நடக்கின்றன என்பதை பற்றி அறிய நுங்கம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு உள்ள முகாமிற்கு நேரடி விசிட் அடித்தோம். இந்த முகாமிற்கு வருகிற பல ஆயிரம் பெண்கள்.. நேரடியாக போகிற இடம் என்றால் அது மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் வழங்கும் கவுண்டர்தான். கிட்டத்தட்ட இந்த முகாமிற்கு வர பெண்களில் 70 சதவிகிதம் பேர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் செய்யத்தான் வருகிறார்கள்..

அதாவது 10 ஆயிரம் பேர் வந்தால் அதில் 7 ஆயிரம் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் செய்யத்தான் வருகிறார்கள். உரிமை தொகை திட்டத்தை இப்போது விரிவாக்கம் செய்ய உள்ளதால் விண்ணப்ப பணிகள் தீவிரமாக நடந்து வருது. இங்கே வந்த பெண்கள் பலர்.. "நாங்க இங்கே வந்தால் உடனடியாக அவங்களே மகளிர் உரிமை தொகை விண்ணப்பத்தை கொடுத்து.. அவங்களே கைப்பட உங்களுக்காக அதை ஃபில் பண்ணியும் கொடுக்குறாங்க. அதோடு உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கானு.. அந்த இடத்திலேயே அதிகாரிகள் சொல்றதால.. வேலைகள் ஈஸியா முடிஞ்சிடுது.

ஆதார் நம்பர், ரேஷன் கார்ட், மொபைல் நம்பர், பேங்க் பாஸ்புக் இதை மட்டும் கொண்டு வந்தால் போதும்.. இந்த முகாமில் ஈஸியா ஒரு ரூபாய் செலவு பண்ணாமல் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும். அது மட்டும் இல்லங்க.. உங்ககிட்ட பேங்க் அக்கவுண்ட் இல்லைன்னா.. இங்கேயே பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணி.. அப்படியே அடுத்த நிமிஷமே மகளிர் உரிமை தொகைக்கும் விண்ணப்பம் செய்ய முடியும்..

என்கிட்டே எல்லாம் இருக்கு.. ஆனால் ரேஷன் கார்டில் பிரச்சனைன்னா.. அதையும் இங்கேயே மாற்றி.. அதன் பின் உடனே அந்த ரேஷன் கார்டை வச்சு மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்ய முடியும். இப்படி எல்லாமே ஒரே இடத்தில் முடிக்கிற மாதிரி தரமா ஏற்பாடுகளை செஞ்சு இருக்காங்க".. என்று தங்களின் அனுபவத்தை பகிர்கிறார்.

உங்களுடன் ஸ்டாலின் - பல துறை சேவைகள்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை மட்டுமில்லாமல்.. பல துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் வழங்குகின்றனர். . நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகள் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகள் 46 சேவைகள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு சேவைகள், இபி அட்டையில் பிரச்சனை, பிறப்பு சான்று, இறப்பு சான்று, திருமண சான்று, வீட்டு வரி பிரச்சனை, தொழில்துறை தொடர்பான பிரச்சனை, மாற்றுத்திறனாளிகள் சேவைகள் என்று எல்லா சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குகின்றனர்...

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்றால்.. அது வேகம்தான். அதிகபட்சம் இங்கே வந்தால் எல்லா வேலைகளையும் 10 நிமிஷம் முதல் 1 மணி நேரத்தில் முடிக்கின்றனர். மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு எல்லாம் விண்ணப்பம் செய்ய அதிகபட்சம் 10 நிமிஷம்தான் எடுத்துக்கொள்கிறார்கள். சரியான ஆவணங்களை கொண்டு வந்தால் போதும். எல்லாம் ஈஸியா முடிந்துவிடும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர்.. எங்கேயும் அலைய வேண்டியது இல்லை.

எல்லாம் ஒரே இடத்தில் இருப்பதால்.. ஒரே ஆள் ஒன்றுக்கும் மேற்பட்ட சேவைகளை செய்ய முடியும். அதுவும் இங்கே இருக்கிற அதிகாரிகள்.. மக்களிடம் தன்மையாக, சரியான திட்டமிடலோடு வழிகாட்டுதல்களை வழங்குறதும் கூடுதல் சிறப்பு. சென்னை மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுக்க இதே திட்டமிடலோடு முகாமை நடத்துகின்ற்னர். அதெல்லாம் சரி இந்த முகாம் எங்க நடக்குதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு கேட்கிறீங்களா.. இதற்காக தமிழக அரசு https://ungaludanstalin.tn.gov.in/ அப்படின்னு ஒரு வலைப்பக்கத்தையே திறந்து இருக்காங்க...