தொழில்நுட்ப மேம்பாட்டு பணி ஆக.3, 4-ம் தேதிகளில் அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் செயல்படாது

தொழில்நுட்ப மேம்பாட்டு பணி ஆக.3, 4-ம் தேதிகளில் அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் செயல்படாது
தொழில்நுட்ப மேம்பாட்டு பணி ஆக.3, 4-ம் தேதிகளில் அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் செயல்படாது

சென்னை: தொழில்​நுட்ப மேம்​பாட்டு பணி காரண​மாக, அண்​ணா​சாலை தலைமை அஞ்​சல​கம் ஆக.3, 4 ஆகிய தேதி​களில் செயல்ப​டாது என்று சென்னை நகர அஞ்​சல்​துறை தெரி​வித்​துள்​ளது.

சென்னை அண்​ணா​சாலை தலைமை அஞ்​சல​கத்​தில், அஞ்​சல் துறை​யின் புதிய மேம்​படுத்​தப்​பட்ட தொழில்​நுட்ப மென்​பொருள் (ஏபிடி 2.0) ஆக.5-ம் தேதி முதல் செயல்​படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மென்​பொருள் மத்​திய அரசின் டிஜிட்​டல் இந்​தியா கொள்​கைப்படி நாட்​டின் வளர்ச்​சிக்கு உதவும். இந்த டிஜிட்​டல் தொழில் நுட்ப சேவையை சுமூக​மாக​வும், பாது​காப்​பான முறை​யிலும் செயல்​படுத்​தப்பட உள்​ளது.

இதன் காரண​மாக, ஆக.3, 4 ஆகிய நாட்​கள் “பரிவர்த்​தனை இல்லா நாட்​களாக” கடைபிடிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதனால், இந்த இரண்டு நாட்​களும் அண்​ணா​சாலை தலை​மை அஞ்சலகத்தில் எந்த ஒரு தபால் சேவை​யும் மேற்​கொள்​ளப்​ப​டாது.

இந்த தற்​காலிக சேவை நிறுத்​தம், புதிய தொழில்​நுட்​பம் சீராக செயல்​படு​வதை உறுதி செய்​வதற்​காக மேற்​கொள்​ளப்​படு​கிறது. எனவே, இந்த பரிவர்த்​தனை இல்லா நாட்​களை கணக்​கில் கொண்​டு, பொது​மக்​கள் தங்​கள் அஞ்​சல் சேவை​களை முன்​கூட்​டியே திட்​ட​மிட்டு மேற்​கொள்ள வேண்​டும் என்று அஞ்​சல்​துறை தரப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.