​​​​​​​மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த ஓபிஎஸ் திட்டம்

​​​​​​​மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த ஓபிஎஸ் திட்டம்
​​​​​​​மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த ஓபிஎஸ் திட்டம்

சென்னை: அ​தி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் குழு சார்​பில் மாநாடு நடத்​து​வதற்கு பதிலாக மக்​கள் சந்​திப்பு இயக்​கம் நடத்த முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் திட்​ட​மிட்​டுள்​ளார்.

அதி​முகவை கைப்​பற்ற முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் நடத்​திய சட்​டப் போராட்​டம் தொய்​வடைந்து வரும் நிலை​யில், நம்​பி​யிருந்த பாஜக​வும் அவரை கைவிட்​டது. இந்நிலையில் பாஜக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கு​வ​தாக பன்​னீர்​செல்​வம் அறி​வித்​தார். இதனிடையே முதல்​வர் ஸ்டா​லினை​யும் சந்​தித்​தார்.

அண்​மை​யில் சென்னை வேப்​பேரி​யில் நடை​பெற்ற மாவட்ட செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​தில், செப்​.4-ம் தேதி மதுரை​யில் மாநாடு நடத்​தப் போவதாக பன்​னீர்​செல்​வம் அறி​வித்​திருந்​தார். தற்​போது பாஜக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கி​யுள்ள நிலை​யில், மாநாடு நடத்​தும் திட்​டத்தை பன்​னீர்​செல்​வம் கைவி்ட்​டு​விட்​ட​தாக தகவல் வெளி ​யாகி​யுள்​ளது.

இதுதொடர்​பாக அவரது ஆதர​வாளர்​கள் கூறிய​தாவது: ஓ.பன்​னீர்​ செல்​வம், மாவட்​டம் அல்​லது மண்டல வாரி​யாகச் சென்று மக்​கள் சந்​திப்பு இயக்​கங்​களை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளார். மாநாடு நடத்​தும் திட்​டம் இல்​லை. இ​தில் எம்​ஜிஆர் உரு​வாக்​கிய கட்சி விதி​களை பழனி​சாமி மாற்​றியது, கட்​சி​யில் இருந்து அவர் நீக்​கப்​பட்​டது, நடத்தி வரும் சட்​டப்​போ​ராட்​டம், ஏன் பாஜக கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறி​னார், மத்​திய பாஜக அரசு தமிழகத்​துக்கு போ​திய நிதியை கொடுக்​காமல் நிறுத்தி வைத்​தது உள்​ளிட்​டவை குறித்து விளக்க திட்​ட​மிட்​டுள்​ளார்​. இவ்​வாறு கூறினர்​.